ஜன்தன் திட்டங்கள் தொடர்பான பணம் அரசிடம் இருந்து நேரடியாக ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இது பற்றி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பிரதம மந்திரி ஜந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலமாக இதுவரை 25 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சார்பில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகளின் ஆன்லைன் தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களின் கீழ் இந்த கணக்குகள் மூலமாக பயனாளிகளுக்கு நிதி அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த 50 கோடி ஜந்தன் கணக்குகளில் பாதி பெண்களின் கணக்குகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் இந்த ஜந்தன் கணக்கை தொடங்கும் போது நம் நாட்டில் இது தேவையா என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வந்தனர். ஆனால் இன்று ஜந்தன் கணக்குகள் மூலமாக ஏழை மக்களுக்கு நலத்திட்டங்களுக்காக 25 லட்சம் கோடி ரூபாயை விநியோகித்திருக்கின்றோம் இது ஒரு சாதனை என அமைச்சர் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் இன்று ஏழைகளின் ஜன்தன் வங்கி கணக்குகளில் 1.75 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக கர்நாடக வங்கியின் டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் செயல்பட தொடங்கியது மேலும் பல்வேறு வங்கிகளின் 75 டிபி யூக்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக வங்கியின் இந்த இரண்டு டிபிக்களும் இதில் அடங்கும் திறமையான காகிதமற்ற பாதுகாப்பான இணைக்கப்பட்ட செயல்படுகிறது அங்கு அவை வாடிக்கையாளர்களை வங்கி பொருட்கள் மற்றும் சேவைகளை சுய சேவை மற்றும் உதவி டிஜிட்டல் முறையில் வழங்கி வருகிறது இது தவிர டிபியுகள் அந்த அந்த மாவட்டத்தில் நிதி உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் வங்கி கல்வி அறிவை ஊக்குவிக்கிறது. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும் தலைவருமான எம் எஸ் மகாபலேஸ்வரர் ஒரு விழாவில் 2 டிபி யூக்களை திறக்க வங்கி தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமைக் கூறிய விஷயமாகும். வங்கி நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது சிறப்பான கௌரவம் ஆகும் என தெரிவித்துள்ளார்.