மதுரை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் அமைதியான முறையில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
ஆனால், பாஜக அரசு ஆதரவு பெற்ற மாநிலங்களில் காவல்துறை மூலம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அசாம், கர்நாடக, புதுடெல்லி ஆகிய மாநிலங்களில், காவல்துறை பாஜக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை மூலம் தடியடி நடத்தப்பட்டுள்ளது. அமைதியாக நடைபெறும் போராட்டம் என்பது தேசத்திற்கு எதிரானதல்ல என்று மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ளது. பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது.” என்றார்.