ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிமுறை இருக்காது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த போது இருந்த இஸ்லாமிய கவுன்சில் முறைப்படியே இப்போதும் ஆட்சி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். தலிபான்களின் உச்சபட்ச ஹைபதுல்லா அகுந்த்சாதா தலைவராக இருப்பார் எனவும் அதிபர் பதவியை விட கூடுதலான அதிகாரம் அவரிடம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இவர் சொல்வது போல ஷரியத் சட்டம் ஆட்சி செய்தால் நிச்சயம் ஆப்கானிஸ்தான் இன்னொரு நரகத்துக்குள் நுழையத்தான் ஆக வேண்டும். ஆப்கானிஸ்தானில் இவர்கள் ஆண்ட (1996-2001) காலக்கட்டத்தில் அந்நாட்டுப் பெண்கள் அனுபவித்த கொடுமைகளை சொல்லவே முடியாது.
பெண்கள் தலை முதல் கால் பாதம் வரை தங்களது ஆடைகளால் மறைக்க வேண்டும். ஆண் துணையில்லாமல் எங்கேயும் செல்ல முடியாது. சிறுமிகள் பாடசாலை செல்லக் கூடாது. மிக மிக முக்கியமாக அவர்கள் வீட்டு வேலை மட்டும் தான் செய்ய வேண்டும். சிறுமிகள் முதல் கைம்பெண்கள் வரை போகப் பொருளாகவே பார்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.