Categories
தேசிய செய்திகள்

ஜனவரியில் தடுப்பூசி… இந்தியாவில் யாருக்கு முன்னுரிமை?… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் இன்னும் ஒரு மாதத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளன.

இதனையடுத்து பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது வரை கொரோனா 2வது அலை ஏற்படவில்லை. கொரோனா பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், இரண்டாம் அலை ஏற்படவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் கொரோனா உச்சத்தைத் தொட்ட நிலையில் தற்போது பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவிற்கு அடுத்த பட்டியலில் இரண்டாம் அலையில் சிக்காமல் தப்பித்து மற்றொரு நாடு அர்ஜென்டினா என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உறுதியாக தடுப்பூசி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அனுமதி வழங்கிய நிலையில், அவசரகால பயன்பாடு என்ற அடிப்படையில் கொண்டுவரப்படும் என்றும், முன்கள பணியாளர்கள், காவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |