பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கினால் அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்குமென்று மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் முக்கியமாக ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். இணை நோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். பிறகு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: “மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஒப்புதல் வழங்கினால் நடைமுறைப்படுத்தப்படும்.
பூஸ்டர் தடுப்பூசி நடைமுறைக்கு வந்த உடனே தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தும். தமிழகத்தை பொறுத்தவரை 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு போடுகிற தடுப்பூசியாக இருந்தாலும் அல்லது பூஸ்டர் தடுப்பூசியாக இருந்தாலும் மத்திய அரசு அனுமதி வழங்கினால் அதனை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.