Categories
மாநில செய்திகள்

ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு… பொது மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை, மதுரை மற்றும் நெல்லை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை, மதுரை மற்றும் நெல்லை உள்ளிட்ட இடங்களில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் உட்பட 22 ரயில்களின் சேவை ஜனவரி இறுதி வரை நீட்டி ஏற்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில்- மும்பை, மதுரை- பிகானேர், கொச்சுவேலி- இந்தூர், சென்னை எழும்பூர்- ஜோத்பூர், ராமேஸ்வரம்- ஓகா, நெல்லை- பிலாசூர் உள்ளிட்ட சிறப்பு ரயில்களில் நீட்டிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |