நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வரகிறது . எனவே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி 2022 முதல் தடுப்பூசியை ஹரியானா அரசு கட்டாயமாக்கியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்கள், பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.