பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மொத்தம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை 9 தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதிக்குள் பத்தாம் தவணை பணமும் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள பத்தாவது தவணை 2000 பணம் புத்தாண்டு அன்று ஜனவரி 1ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தவணை பணம் குறித்த விவரங்களை pmkisan.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.