மூத்த குடிமக்களுக்கு பத்திரபதிவுவில் முன்னுரிமை அளிக்கும் உரிமை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக பத்திர பதிவு துறை அறிவித்துள்ளது .
தமிழகத்தில் தற்போது” ஸ்டார் 2.0″ என்ற சாப்ட்வேரை பயன்படுத்தி பத்திரப்பதிவு ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டோக்கன் வரிசையில் பத்திரப்பதிவு நடக்கின்றது. இதில் சில நேரங்களில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பத்திர பதிவு டோக்கன் எண் வரிசை முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
ஆனால் விற்பவர்கள் அல்லது வாங்குபவர்களில் யாராவது ஒருவர் 70 வயதை கடந்தவர்கள் என்றால் டோக்கன் எண் எதுவானாலும் உடனடியாக பதிவுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை மூலமாக அவரின் வயதை உறுதி செய்து மூத்த குடிமக்களை பத்திரப்பதிவுக்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும். இந்த புதிய நடைமுறை ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.