இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுரக்ஷா யோஜனா, தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டங்கள் போன்ற சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் இறுதியில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு தீர்மானிக்கின்றது. இந்த புதிய வட்டி விகிதம் 2023 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும். அவ்வகையில் தற்போது மத்திய அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தீர்மானித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் தற்போது 6.8 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு திட்டத்தில் 7.6 சதவீதம் பற்றி தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை எட்டு சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதனைப் போலவே 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான term deposit திட்டத்தின் வட்டி விகிதம் 1.1% புள்ளிகள் வரை உயரும் என்றும் மாத வருமானத் திட்டத்தில் 6.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக வட்டியை உயர்த்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது.