Categories
மாநில செய்திகள்

ஜனவரி 10 -ஆம் தேதிக்குள்… “போட்டி தேர்வு பயிற்சியாளர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு”… வெளியான தகவல்…!!!!!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ. வீரராகவ் புதன்கிழமை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, ஐ.பி.பி.எஸ், டி.ஆர்.பி, டி.என்.பி.எஸ்.சி டி.என்.யு.எஸ், ஆர்.பி போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சி வகுப்புகள் மூலமாக பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் இதில் பயிற்சி அளிக்க முன் வரும் விண்ணப்பமுள்ள முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வருகிற ஜனவரி 10-ஆம் தேதிக்குள் https.//bicly/facutvregistrationform என்ற கூகுள் இணைப்பில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044-22501006,22501002 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |