Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதற்கு மாதாந்திர வட்டி வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து வருமான வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு இந்த அபராத வட்டி தொகை பொருந்தும். 2019-2020 நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு  பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனிநபர்கள் வருமான வரிக் கணக்கை 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். மேலும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அவர்களுடைய கணக்கை தணிக்கை செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |