Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 10 முதல் மீண்டும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை புறநகர் ரயில் சேவை அத்தியாவசிய பணியாளர்கள், ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கலாம் என்று அனுமதி வழங்கியது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ரயில் சேவை தொடங்கப்பட்ட போது, சென்னை மற்றும் மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 4ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் தேஜஸ் சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது.

இதனையடுத்து ஜனவரி 10ஆம் தேதி முதல் எழும்பூர் மற்றும் மதுரை இடையே மீண்டும் தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், வியாழக்கிழமை தவிர வாரத்தில் மற்ற ஆறு நாட்களும் தேஜஸ் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |