நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் திரைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.டி.டி. மூலம் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகுமா? என கேள்வி ரசிகர்களின் மனங்களில் எழுந்தன.
இதனிடையே, ஜனவரி மாதம் 13-ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் திரு. சக்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மாஸ்டர் திரைப்பட வெளியீட்டின் போது திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.