தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் நேற்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர்.
அந்த சந்திப்பில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் பற்றி பேசியதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மதியம் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ‘ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கை அதிர வைக்கும். தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்’ என இந்த அறிவிப்புடன் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் இறுதி காட்சியில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி போடும் சண்டைக் காட்சியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டரை ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.