தமிழகத்தில் சிறைக்கைதிகளை ஜனவரி 14-ஆம் தேதி முதல் சந்திப்பே மீண்டும் அனுமதி அளித்து சிறைத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சிறைக்கைதிகளை ஜனவரி 14-ஆம் தேதி முதல் சந்திக்க மீண்டும் அனுமதி அளித்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிறைவாசிகளை சனி மற்றும் ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை சந்திக்கலாம். அதன்படி புழல், கோவை மற்றும் மதுரை சிறைகளில் தினந்தோறும் அதிகபட்சமாக 150 பேர் அனுமதிக்கப்படுவர். சிறை வாசிகளை சந்திக்க விரும்பும் பார்வையாளர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் prisons.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் அதற்கான மனுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.