Categories
மாநில செய்திகள்

“ஜனவரி 15 ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். அதனைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையான வருகின்ற 15ஆம் தேதி சனிக்கிழமையன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு விழாவை காண முதல்வருக்கு அழைப்பு விடுக்க உள்ளோம் என்று விழா கமிட்டி தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து பாலமேடு கிராம பொது மகாலிங்கம் மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, பொருளாளர் பிரபு, செயலாளர் ஜோதி தங்கமணி ஆகியோர்கள் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை நேரில் சந்தித்து விழாவிற்கு வருகை தர அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெறும். ஜல்லிக்கட்டு விழாவிற்காக 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |