மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ ஆகம பகுதிநேர பாடசாலையில் மூன்று ஆண்டு பயிற்சி வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலைத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1.50 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ வேதாகம பகுதிநேர பாடசாலை பள்ளியில் மூன்று ஆண்டுகள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றது.
இதில் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக, 13 வயது நிரம்பியவர்களாக அதிகபட்சம் 20 வயதுக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இதில் சேர விரும்பும் மாணவர்களின் சேர்க்கை படிவம் கோவில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் , கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை 600004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வரும் 15ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது