சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 18ம்தேதி விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கலந்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையை செலுத்தினால் அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அவருக்கு விதிக்கப் பட்டிருந்த அபராத தொகையை நேற்று சசிகலா வழக்கறிஞர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் காசோலை வாயிலாக வழங்கினார். இதனையடுத்து தற்போதைய நிலவரப்படி சசிகலா 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18ம்தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது.