நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை படிப்புகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் ஜனவரி 18ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பக் கட்டணம், தகுதி மேற்கண்ட படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை என்ற www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.