கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள். நவம்பர் 17 முதல் முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் ஜனவரி 24ஆம் தேதி மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.
இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஜனவரி 20வரை தங்கள் பைகளில் தேங்காய் எடுத்துச்செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எளிதில் தீப்பிடிக்கக்கூடியது என்பதால், தேங்காய்களுக்கு விமானத்தில் அனுமதி தரப்படுவது இல்லை. இதனால், ஐயப்ப பக்தர்கள் சீசன் காலத்தில் விமானங்களை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. தற்காலிக அடிப்படையில் தேங்காய் அனுமதிக்கப்பட்டுள்ளது.