Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 28ஆம் தேதி திறப்பு…! தயாராகும் ஜெ.இல்லம்…. காத்திருக்கும் பொதுமக்கள் …!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் வருடத்தில் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார். இந்நிலையில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் தான் வாழ்ந்தார். எனவே அந்த இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2017ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோரால் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் பிறகு ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடானது அரசுடமையாக்கப்பட்டது. மேலும் இதற்காக தமிழக அரசு சார்பாக நினைவு இல்லமாக மாற்றுவதற்கு உரிய இழப்பீட்டுத் தொகையாக 68 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு கையகப்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மூன்று கட்டங்களாக ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அனைத்து பொதுமக்களும் காணும் வகையில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை  எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்து அரசிடம் தெரிவித்துள்ளது. அதன்படி பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் தலைமையில் பொறியாளர்கள் குழுவினர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக முதலில் ஜெயலலிதாவின் வீடு முழுவதும் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

அதன் பிறகு அந்த வீட்டில் எந்தெந்த இடங்களில் எந்த பொருட்களை  வைக்கலாம் என்று பட்டியலிடப்பட்டு வருகிறது. மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், அவர் உபயோகித்த பொருட்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் படித்த புத்தகங்கள் போன்ற அனைத்தும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் பூஜை அறைகளையும் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் இல்லத்தில் மார்பளவு கொண்ட சிலைகளும் வைக்கப்பட இருக்கின்றன.

மேலும் இதற்கான பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 28ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக போயஸ்கார்டன் இல்லமானது திறக்கப்படவுள்ளது.  இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 27ஆம் தேதி அன்று திறந்து வைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |