தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் செப்-1 முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்புகள் அனைத்தும் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முழுநாளும் பள்ளிகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நேரடி வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடைமுறை குறித்து ஆய்வு செய்ய 28ஆம் தேதி முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.