அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி அல்லது ஜனவரி 15ஆம் தேதிக்குள் தங்களின் அசையா சொத்து விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பது கட்டாயம்.
அடுத்த பதவி நிலை உயர்வு மற்றும் ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வசதியாக முந்தைய ஆண்டுக்கான அசையா சொத்து விவரங்களை வருகின்ற ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.