நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அரசு பணிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள்,மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories