ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஆந்திரா, தமிழகம், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை தொடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தவும், மருத்துவமனைகளில் போதிய அளவு ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றின் கையிருப்பை உறுதிசெய்யவும், பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.