Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31-ம் தேதிக்குள்…. மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்?…. கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் பள்ளிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அதேபோல் ஜனவரி இறுதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் பெரும்பாலான மாநிலங்களில் அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியை அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை சங்கத்தின் உறுப்பினர்கள் நேரில் சென்று சந்தித்துள்ளனர். ஏற்கனவே இந்த சங்கத்தினர் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று காலை 11 மணி அளவில் இந்த சங்கத்தினர் கல்வி அமைச்சரை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின் போது கல்வி அமைச்சர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார் என்று இந்த சங்கத்தினர் கூறுகின்றனர்.

அதாவது இவர்கள் பள்ளிகளை ஜனவரி 31-ஆம் தேதி முதல் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் 2021-22 கல்வியாண்டு மே 30, 2022 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் 220 பள்ளி வேலை நாட்களில் வெறும் 85 நாட்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடந்துள்ளது. எனவே ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடமிருந்து பள்ளிகளில் மீண்டும் நேரடியான வகுப்புகளை நடத்துவதற்கான கடிதம் பெறப்பட்டுள்ளது.

அதேபோல் டிஜிட்டல் முறை கல்வியின் வரம்புக்குறைவு மற்றும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி அதிகரிப்பது ஆகிய காரணங்களை கூறி அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை சங்கம் மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் இந்த நிலையிலும் உணவகங்கள், மால்கள் உள்ளிட்டவை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது ஏன் பள்ளிகள் மட்டும் மூடப்பட வேண்டும் ? என்று இந்த சங்கத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |