தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories