Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4ம் தேதி முதல்…. அரிசி அட்டைத்தாரர்களுக்கு மட்டும்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பெற வீடு வீடாகச் சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதையடுத்து ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் சமூக இடைவெளி கடைபிடிக்கும் பொருட்டு ஒரு நாளைக்கு 150 முதல் 200 பேருக்கு என டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |