தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான மூன்றாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கல்விச்சான்றிதழ் மற்றும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வுக்கான தேதி,நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.