ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய 75வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார். அதனையொட்டி பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துச் செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவ்வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ராஷ்டிரபதி ஜிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவளுடைய மிகுந்த நுண்ணறிவு மற்றும் கொள்கை விஷயங்களைப் பற்றிய புத்திசாலித்தனமான புரிதல் நம் தேசத்திற்கு கிடைத்துள்ள பெரும் சொத்து. பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகுந்த இரக்கம் உடையவர். அவருடைய உடல் ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.