Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட திரவுபதி முர்மு”….. கோத்தகிரி பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்…..!!!!!

திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டதை கோத்தகிரி பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடினார்கள்.

இந்தியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றியடைந்தார். இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மேலும் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு.

இவர் நாட்டில் பழங்குடியினத்தில் இருந்து வந்த முதல் ஜனாதிபதி ஆவார். இந்நிலையில் இவர் பதவியேற்று கொண்டதை கொண்டாடும் விதமாக கோத்தகிரி அருகே இருக்கும் கரிக்கையூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்வில் இந்திய நிலக்கரி நிறுவன இயக்குனர் ராஜேஷ் சந்தர், நீலகிரி சேவா கேந்திர நிர்வாகி ஹரிசுதன் உள்ளிட்டோர் பழங்குடியின மக்களோடு கலந்து கொண்டு கொண்டாடினார்கள்.

Categories

Tech |