சிறப்பாக செயல்படும் ஜனாதிபதியை தேர்வு செய்வதில் மக்கள் தவறு செய்துவிடக் கூடாது என்று துணை ஜனாதிபதி வேட்பாளர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாக துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பாக தான் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் மூலமாக அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்ற முதல் தெற்காசிய, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் எனும் புதிய வரலாற்றை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்து, ஏற்றுக்கொண்டு ஜனநாயக கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், தனது முதல் உரையில் தன் தாயை நினைவு கூர்ந்துள்ளார்.
ஒரு வலிமையான கருப்பினப் பெண்ணாக இன்று தான் இருப்பதற்கு முக்கிய காரணம் தனது தாய் மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். என்னைப் பெற்றெடுத்த போது இந்த நாளை நினைத்திருக்க மாட்டார். இந்திய பாரம்பரியத்தை சேர்ந்தவர் தான் என்பதில் பெருமை கொள்வதாகவும், தாய் தம்முடன் இல்லாவிட்டாலும் மேலே இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார் எனவும் நெகிழ்ச்சியுடன் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். மேலும் துணை ஜனாதிபதி வேட்பாளராக சம்மதிக்கிறேன் என்றும்……………….. . கருப்பின மக்களுக்கு சம உரிமை இல்லை என்றும் கூறியுள்ளார். இனவெறி என்னும் வைரசுக்கு மருந்து கிடையாது. சிறப்பாக செயல்படும் ஜனாதிபதியைத் தேர்வு செய்வதில் மக்கள் தவறு செய்துவிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.