ஹாலிவுட் திரைப்படம் குறித்த கருத்துக்களை கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் லியனார்டோ டிகாப்ரியோ. இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘டோன்ட் லுக் அப்’. இந்த திரைப்படத்தை ஆடம் மெக்கே இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஜெனிபர் லாரன்ஸ், ராப் மொர்கன், ஜொனா ஹில் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து கருத்துக்களை பாடலாசிரியர் வைரமுத்து தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ”விண்கோள் ஒன்று மோதப்போவதால் பூமி சிதறப்போகிறதென்று பதறிச் சொல்கிறார்கள். நாசா விஞ்ஞானிகள் அமெரிக்க ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார். உலகம் நகையாடுகிறது, கடைசியில் அது நிகழ்ந்தே விடுகிறது. அழகான ஆங்கிலப் படம் Don’t Look Up நீங்கள் மேலே பாருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.