Categories
உலக செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: டிரம்ப் போடும் பிளான்….விசாரணைக்குழு வெளியிட்ட தகவல்….!!!!

அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சி வேட்பாளராகவும், ஜோபைடன் ஜனநாயக கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டனர். அந்த கடும் போட்டியில் ஜோபைடன் அபார வெற்றியடைந்தார். இதையடுத்து ஜோபைடனின் வெற்றிக்கு சான்றளிக்க கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதனை ஏற்கமுடியாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இவற்றில் 5 பேர் கொலை செய்யப்பட்டனர். அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் இது கரும் புள்ளியாக அமைந்தது.

இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்துகிற குழுவின் துணைத்தலைவர் லிஸ் செனி கூறியிருப்பதாவது “நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறையின் போது டிரம்ப், தாக்குதல் நெருப்புச்சுடரை ஏற்றிவிட்டார். பல்வேறு மாதங்களாக டிரம்ப் ஜனாதிபதி தேர்தலை முறி அடிப்பதற்கும், ஜனாதிபதி அதிகார மாற்றத்தை தடுப்பதற்கும் ஒரு அதிநவீன 7 பகுதி திட்டத்தை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத்தார்.

இத்திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தின் ஆதாரத்தையும் நீங்கள் பார்ப்பீர்கள். ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது என்ற தன் தவறான கருத்தை பரப்புவதற்காக டிரம்ப், அப்போதைய அட்டார்னி ஜெனரல் பில்பாரை மாற்ற திட்டமிட்டார். இதில் டிரம்ப் உண்மையில் கலவரத்தை நிறுத்தவோ (அல்லது) அவரது ஆதரவாளர்களை வெளியேறச் சொல்லவோ எதையும் செய்ய விரும்பவில்லை. இதற்குரிய சாட்சியங்களை பொதுமக்கள் கேட்பார்கள். கலவரத்தைத் தணிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என தன்னிடம் கூறிய ஆலோசகர்களிடம் டிரம்ப் கோபத்தை வெளிப்படுத்தினார்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |