Categories
அரசியல்

ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்படும் தமிழிசை…??? அவருடைய ஒப்பினியன் என்ன..???

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது இதற்கு 180 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டது தான் காரணம். இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. மக்கள் தொடர்ந்து முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும்.

தெலுங்கானாவில் ஆளுநரின் உரை இல்லாமல் சட்டமன்றம் தொடங்கியுள்ளது. அதையெல்லாம் நான் மக்களுக்காக பெரிதுபடுத்தவில்லை. மக்களுக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். பாஜகவின் ஆட்சி இல்லாத சில மாநிலங்களில் ஆளுநர்கள் எதிரிகள் போல் பார்க்கப்படுகிறார்கள். நானும் அதில் ஒருவராக மாறுவேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

குடியரசுத் தலைவர் பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும் பேசப்படுகிறது. என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் நானும் ஒரு சாதாரண குடிமகள் தான் என சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். புதுச்சேரி விமான நிலையத்தில் விரைவில் விமான சேவை தொடங்க உள்ளது எனவும் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற மாநிலங்களுக்கு விமான சேவை தொடங்கும் எனவும் கூறினார்.

Categories

Tech |