ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தேசிய சர்வதேச விவகாரங்கள் பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது நடைமுறையில் இருக்கும் லடாக் விவகாரம், கொரோனா தொற்றின் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் , பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவ வாய்ந்ததாக கருதப்படுகிறது.