Categories
தேசிய செய்திகள்

“ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவு”…. பாராளுமன்றத்தில் பிரிவு உபச்சார விழா….!!!!!!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017 ஆம் வருடம் ஜூலை 25ஆம் தேதி முதல் பதவி வகித்து வருகின்றார். அவருடைய பதவி காலம் வருகின்ற 24-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்க்கு வருகின்ற 23ஆம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற இருக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்களவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

ஜனாதிபதிக்கு அனைத்து நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமடங்கிய புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. மேலும் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் ஜூலை 24ஆம் தேதி முடிவடைய இருப்பதால் மக்களவை மாநிலங்களவை எம்பிக்கள் மரியாதை செய்கின்றனர். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரியா விடை தரப்படுகின்றது.

Categories

Tech |