Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறார்…. எதற்கு தெரியுமா…?

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த தசரா பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். இதற்காக அவர் 2 நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். இதனைத் தொடர்ந்து லடாக் பகுதிக்கு செல்லும் அவர் லே, மற்றும் சிந்துப் படித்துறையில் சிந்து தர்ஷன் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை உதம்பூரில் ராணுவ வீரர்களுடன் உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் 15ஆம் தேதியன்று திரஸ் பகுதியிலுள்ள கார்கில் போர் நினைவு சின்னத்தில் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்த உள்ளதாகவும், அதன் பின்பு ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி வருகையால் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |