நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் முதல் ஆண்டில் மட்டும் 17 புள்ளி 90 கோடி பேர் வங்கி கணக்கை திறந்து உள்ளனர். இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் இந்த கணக்கை தொடங்கலாம்.
இந்த கணக்கு வைத்துள்ள பயனாளிகளுக்கு ஓவர் டிராப்ட் என்ற வசதியும் கிடைக்கும். அதன் கீழ் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொள்ளலாம். தொடக்கத்தில் இதன் வரம்பு ஐந்தாயிரம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் ஜன் தன் கணக்கு தாரர்கள் பத்தாயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும். இந்த கடனை பெறுவதற்கு கணக்குத் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைந்து இருக்க வேண்டும். இதில் 2000 ரூபாய் வரை கடன் பெறுவதற்கு எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது.