Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜன்னலை உடைத்த மர்ம நபர்கள்…. தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

ஜன்னலை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் எஸ்.என் சாவடியில் சீதாராமன்-ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சீதாராமன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் பெரிய செவலையை சேர்ந்த அவர்களது 3-வது மருமகன் உடல் நல பாதிப்பால் உயிரிழந்தார்.

இதனால் கடந்த 18-ஆம் தேதி தம்பதியினர் பெரியசெவலைக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு வீடுக்கு திரும்பி வந்த பார்த்தபோது ஜன்னல் உடைந்து கிடந்ததை பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |