Categories
தேசிய செய்திகள்

ஜன.1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி வரை பனிப்பொழிவு உள்ளது.அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை ஒட்டி வடமாநிலங்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே உள்ளது. பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

இந்நிலையில் டெல்லியில் அதிகாலைப் பொழுதில் ஆட்கள் மறையும் அளவிற்கு கடும் பணிப்படைவு உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை கருதி டெல்லியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது சிரமமாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |