Categories
தேசிய செய்திகள்

ஜன. 1 முதல் கொரோனா பரிசோதனை கட்டாயம்…. மத்திய அரசு வெளியிட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!!

உலக அளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உட்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய பி.எப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதன்பிறகு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு  கொரோனா கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் முன்னதாகவே கொரோனா பரிசோதனை செய்து அந்த ரிப்போர்ட்டை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |