Categories
மாநில செய்திகள்

ஜன-1 முதல் விண்ணப்பிக்கலாம்…. மின்வாரிய ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக மின்வாரியத்தில் 85 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு விருப்ப இடமாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மனுக்கள் பெறப்படும். இந்த நிலையில் அடுத்த வருடத்தில் விருப்ப இடமாறுதல் பெற விரும்புவர்கள் மின் வாரிய இணையதளத்தில் சென்று ஜனவரி 1ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மின்வாரியத்தில் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் இடமாறுதல் கோரி விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனை தற்போது ஒரு வருடமாக குறைக்கப்பட்டது. இதனால் இந்த முறை அதிகம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |