நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
நாட்டில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஜனவரி 10 ஆம் தேதி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். 60 வயதை கடந்தவர்கள், இணை நோய் உள்ளவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.