Categories
தேசிய செய்திகள்

ஜன.21ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்…. 50% அரசு ஊழியர்களுக்கு அனுமதி… மாநில அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஜனவரி 21-ஆம் தேதி வரை மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் மட்டும் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது. இதனை போல் தமிழ்நாட்டிலும் 50% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |