Categories
தேசிய செய்திகள்

பாலியல் குற்றங்களை தடுப்போம்!…. பெண் குழந்தைகளை பாதுகாப்போம்!…. “இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்”….!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் “தேசிய பெண்கள் தினம்” ஜனவரி 24-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது இந்த நாள் 2008-ஆம் ஆண்டு முதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் சிறப்பிக்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த நாள் சமூகத்தில் பாலின சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் பெண் குழந்தையை காப்பாற்றுதல், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சமத்துவமின்மை, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல், பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்தல், குழந்தை பாலின விகிதங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த தினம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Categories

Tech |