Categories
மாநில செய்திகள்

“ஜன.24-ல் பாஸ் கிடைக்கும்!”…. மாதாந்திர சீசன் பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாதாந்திர சீசன் பயணிகளுக்கு மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களுக்கு பிறகு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வருகின்றது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் நேற்று இரவு முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மாதாந்திர சீசன் பயணிகளுக்கு மாநகர போக்குவரத்து கழகம் ஒரு நாள் நீட்டிப்பு வழங்கியுள்ளது. எனவே அனைத்து மாநகர போக்குவரத்து கழக சீசன் டிக்கெட் விற்பனை மையங்களிலும் ரூ.1000 சீசன் பாஸ்களை நாளை ( 24.01.2022 ) ஒரு நாள் மட்டும் வழக்கம் போல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |