Categories
மாநில செய்திகள்

“ஜன.31-ம் தேதி வரை ரத்து!”…. ரயில் பயணிகளுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்களாக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் ரயில் பயணங்கள் மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர். பின்னர் தொற்று பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ரயில்களும் வழக்கம் போல் இயங்க தொடங்கியது. அதன் பிறகு மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது.

இருப்பினும் ரயில் சேவைகள் இந்த அலையின் போது பெரிய அளவில் குறைக்கப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு சமயத்தில் பேருந்துகள் ஓடாது என்பதால் மக்கள் ரயில்களில் தான் பயணத்து வருகின்றனர். இந்த நிலையில் சில ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தெற்கு ரயில்வே அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்,

1. திருப்பதி-காட்பாடி பயணிகள் சிறப்பு ரயில் இன்று முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதாவது திருப்பதியில் இருந்து மாலை 7.25 மணியளவில் புறப்படும் இந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2. காட்பாடியில் இருந்து காலை 6.15 மணியளவில் புறப்படும் காட்பாடி-திருப்பதி பயணிகள் சிறப்பு ரயில் ( வண்டி எண் 07662 ) ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3. சென்ட்டிரலில் இருந்து மாலை 4.30 மணியளவில் புறப்படும் சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்- பித்திரகுண்டா எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 17238 ) ஜனவரி 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது.

4. பித்திரகுண்டாவில் இருந்து அதிகாலை 4.45 மணியளவில் புறப்படும் பித்திரகுண்டா-எம்.ஜி.ஆர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 17237 ) ஜனவரி 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |