Categories
உலக செய்திகள்

“ஜபோரிஜியாவில் ரஷ்யப்படைகள் குண்டு வீச்சு தாக்குதல்”… 23 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஏழு மாதங்களாக ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து இருக்கிறது. மேலும் பல நகரங்களை கைப்பற்ற ரஷ்ய பணிகள் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் ரஷ்யப்படைகள் வசம் இருக்கின்ற லுஹான்ஸ் டொனட்ஸ்க், கெர்சன், மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு ரஷ்யா முடிவு செய்திருக்கிறது.

மேலும் கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற இரண்டு பிராந்தியங்களையும் சுதந்திரப் பிரதேசங்களாக அங்கீகரிக்கும் அதிகாரப்பூர்வமான ஆணையில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டுள்ளார். தெற்கு உக்ரைனில் அமைந்திருக்கின்ற ஜபோர்ஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் மாநில இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அங்கீகரிக்க நான் உத்தரவிடுகிறேன் என அதிபர் புதின் ஆணையில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த சூழலில் உக்ரைனில் ரஷ்ய படைகள் வசம் இருக்கின்ற லுஹான்ஸ்க், டொனாக்ஸ்க், கெர்சன், மற்றும் ஜபோர்ஜியா போன்ற நான்கு பிராந்தியங்களை அதிகாரப்பூர்வமாக தன்னுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா முடிவு செய்திருக்கிறது.

இந்த சூழலில் ஜபோர்ஜியாவில் பொதுமக்கள் சென்ற வாகனம் மீது ரஷ்ய படைகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் 28 பேர் காயமடைந்திருப்பதாக ஜபோரிஜியா காந்தியை கவர்னர் கூறியுள்ளார். மேலும் தாக்குதலுக்கு ஆளான வாகனத்தில் சென்றவர்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தங்கள் உறவினர்களை பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |